2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

310 விமான பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்

Editorial   / 2020 மார்ச் 31 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா இராணுவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிறிதொரு தொகுதி  விமான பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.

கொரோனோ வைரஸ் தாக்கத்தையடுத்து, வவுனியா மாவட்டத்தில்,  பம்பைமடு இராணுவ முகாம், வேலங்குளம் விமானபடைத் தளம், பெரியகட்டு இராணுவ முகாம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில்,  கனடா, இலண்டன் இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள், 14 நாள்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 167 பேர் 28ஆம் திகதியன்று விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று (31) மேலும் 310 பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.

வேலங்குளம் விமானபடைம் தளத்தில் இருந்த 206 பேரும் பெரியகட்டு முகாமில் இருந்த 104 பேருமே இதன்போது விடுவிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு நோய்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டப் பின்னரே, அவர்கள் தமது வதிவிடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு நோய்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

 காலி,மாத்தறை ,கொழும்பு, கண்டி, அளுத்கம ஆகிய பகுதிகளை சேர்ந்த பெரும்பான்மையின மக்களும் வடக்கின் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த 28 தமிழ் மக்களும் இதன்போது விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .