2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

4 குளங்கள் வான் பாய்கின்றன

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 நவம்பர் 13 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு முத்தையன் கட்டு நீர்ப்பாசனத்திணைக்களத்தின் கீழுள்ள உடையார் கட்டு மற்றும் விசுவமடுக்குளம் உள்ளிட்ட 4  குளங்கள் முழுமையான நீர் தேங்கி வான் பாய்கின்றன என முத்தையன் கட்டு நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உடையார்கட்டு குளத்தின் நீர் மட்டம் 23 அடி 5 அங்குலமாகவும் மருதமடுக்குளத்தின் நீர் மட்டம் 14 அடி 3 அங்குலமாகவும் விசுவமடுக்குளத்தின் நீர் மட்டம் 20 அடி 4 அங்குலமாகவும் தட்டையர் மலை குளத்தின் நீர் மட்டம் 13 அடி 9 அங்குலமாகவும் உயர்வடைந்து முழுமையாக நீர் தேங்கி வான் பாய்கின்றன.

இது தவிர ஏனைய குளங்களான முத்துஐயன்கட்டுக்குளத்தின் நீர்மட்டம் 15 அடி 11 அங்குலமாகவும் கணுக்கேணிக்குளத்தினுடைய நீர்மட்டம் 11 அடி 3 அங்குலமாகவும் தண்ணீர் முறிப்புக்குளத்தினுடைய நீர்மட்டம் 17 அடி 4 அங்குலமாகவும் மடவாளசிங்கன்குளத்தின் நீர்மட்டம் 15 அடியாகவும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .