2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

6,715 பேருக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகள் வழங்க வேண்டிய தேவை

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 மார்ச் 06 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு கரைதுரைப்பற்று புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற 6,715 பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்க வேண்டிய தேவையிருப்பதாக மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் திருமதி ஜெயபவானி கணேசமுர்த்தி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் 23 கிராம அலுவலர் பிரிவுகளில் வாழ்கின்ற மக்களுக்கு எந்த விதமான சமுர்த்தி கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை. இதனால் வறுமைக்கோட்டுக்கு வாழ்கின்ற பல குடும்பங்கள் கஸ்ரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில், கடந்த வாரம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திலும் இவ்விடயம் விவாதிக்கப்பட்;டது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சமுர்த்தி ஆணையாளர், மாவட்டத்தில் 43,155 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 35,295 பேர்  வாழ்கின்ற நிலையில், 11,258 குடும்பங்களுக்கு மாத்திரம் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், புதுக்குடியிருப்பு  மற்றும் கரைதுரைப்பற்று ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் 23 கிராம சேவையாளர் பிரிவுகள் இவ்வாறான சமுர்த்தி கொடுப்பனவுகளுக்குள் உள்வாங்கப்படவில்லை.

மேற்படி 23 கிராம அலுவலர் பிரிவுகளிலும் ஆறாயிரத்து 715 பேர் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.

இவர்களுக்கு இந்த உதவித்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும். இதற்காக தொடர்ந்து கோரிக்;கை விடுத்து வருகின்றோம் எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .