2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘8 தமிழ்க் கிராமங்களுக்கும் வலை வீச்சு’

Niroshini   / 2021 மே 04 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எட்டு தமிழ்க் கிராம அலுவலர் பிரிவுகளையும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கொக்கிளாய் கிழக்கு, கொக்களிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு, கருநாட்டுக்கேணி, செம்மலை கிழக்கு, செம்மலை ஆகிய எட்டு தமிழ்க் கிராம அலுவலர் பிரிவுகளே, இவ்வாறு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருவதாகக் கூறினார்.

இந்தச் செயற்பாடானது, முல்லைத்தீவில், சிங்கள அலகொன்றை ஏற்பாடுத்துவதற்கான முயற்சியெனத் தெரிவித்த அவர், இதேவேளை வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற தமிழர்களின் பூர்வீக பகுதிகளாக இந்த இடங்கள் காணப்படுகின்றன எனவும் இந்நிலையில், வடக்கு - கிழக்கை இணைக்கும் இந்தப் பகுதிகளை ஆக்கிரமித்து, சிங்களமயப்படுத்தி, தமிழர் தாயகப் பகுதிகளை கூறுபோடும் நடவடிக்கையாகவும் இது அமைந்துள்ளதெனவும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .