2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அக்கராயனில் குடிநீர் விநியோகத் திட்டம் முன்னெடுப்பு

Editorial   / 2018 ஜனவரி 06 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்ரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி – அக்கராயன் பிரதேசத்தில், கிராமிய நீர் வழங்கல் திடடத்தின் கீழ் 433 குடும்பங்களுக்கான குடிநீர் விநியோக வேலைத்திட்டங்கள் மாவட்ட செயலாளரால் வழங்கப்பட்டுள்ள 34 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினுடைய பிராந்திய முகாமையாளர் இ.ஜெகதீசன் தெரிவித்தார்.

அக்கராயன் பிரதேசத்தில், கிராமிய நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டத்தின் கீழ், கடந்த 2014ஆம் ஆண்டு  முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 30 மீற்றர் கனஅளவு கொண்ட நீர்த்தாங்கி  அமைக்கப்பட்டதுடன், நீர் சுத்திகரிப்பு நிலையம் நீர் பெறும் கிணறு என்பன அமைக்கப்பட்டு அதன் வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டது.

இதையடுத்து, அக்கராயன் மகா வித்தியாலயத்துக்கும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இதனை அண்மித்த பகுதி மக்கள் தமக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளுமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையிலேயே, இக்குடிநீர் விநியோகத்திடடம் தொடர்பாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினுடைய பிராந்திய முகாமையாளர் அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடரந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“மாவட்ட செயலாளர்  ஊடாக அதற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு 433 குடும்பங்களின் விவரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

“இதற்காக மாவட்ட சௌலாளரால் 34 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் மூலம் வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் நிலவிய மழை உடனான காலநிலையால் அவற்றை முன்னெடுப்பதில் தாமதங்கள் காணப்பட்டன.

“எதிர்வரும் ஏப்ரல்  மாதத்தில் இதன் பணிகளை   நிறைவுறுத்தி 433 பேருக்குமான இணைப்புகளை வழங்க முடியும்” எனத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .