2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அதிகமான நெல் கொள்வனவு

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

ஒட்டுசுட்டான் பகுதியில், விவசாயிகளிடம் இருந்து 12 இலட்சத்துக்கும் அதிகமான கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு -ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கடந்த ஆண்டு பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு விவசாயிகள் அறுவடை செய்து விற்பனை செய்துள்ளார்கள்.

இந்த நெல்லை நெல் கொள்வனவு அமைச்சு ஒரு விவசாயியிடம் இருந்து இரண்டாயிரம் கிலோகிராம் நெல்லை கொள்வனவு செய்துள்ளது. சம்பா 41 ரூபாய்க்கும் நாடு 38 ரூபாய்க்கும் கொள்வனவு செய்துள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தல் அமைக்கப்பட்ட நெல் கொள்வனவு களஞ்சியத்தில் 12 இலட்சத்தி 40 ஆயிரம் கிலோ நெல்லை 620 விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெல் களஞ்சியம் நிரம்பியுள்ளது இருந்தும் அதிகளவு விவசாயிகள் பச்சை நெல்லாக தனியாருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்துள்ளமை குறிப்படத்தக்கது.

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நெல்லை கொள்வனவு செய்தமையால் விதைத்து அறுவடை செய்த அனைத்து நெல்லையும் நெல்கொள்வனவு பகுதிக்கு கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாகவே, தனியாருக்கு குறைந்த விலையில் நெல்லை விற்பனை செய்துள்ளதாக, கவலை தெரிவித்த விவசாயிகள், அடுத்த போகத்திலாவது மட்டுப்படுத்தப்பட்ட நெல்லின் அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X