2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அம்பாள்புரத்துக்கு பஸ் சேவை ஆரம்பம்

சண்முகம் தவசீலன்   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு அம்பாள்புரம் பகுதி மாணவர்களுக்காக, ஜனாதிபதியின் பணிப்புக்கமைய இன்று (21) முதல் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் குறித்த பகுதியில் பஸ் சேவை இல்லாததன் காரணமாக, மாணவர்கள் 24 கிலோமீற்றர் தூரம் நடந்து பாடசாலை சென்று வரவேண்டியிருந்தது.

குறித்த செய்தி ஊடகங்களிலும் வெளிவந்திருந்தன.

இந்நிலையில், ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக இன்று (21) முதல் இலங்கை போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், மன்னாரில் இருந்து காலை 6.40 மணிக்கு  புறப்பட்டு அம்பாள்புரத்துக்கு வருகை தரும் பஸ், மாணவர்களை ஏற்றி வன்னிவிளாங்குளம் பாடசாலையில் இறக்கிய பின் முல்லைத்தீவுக்கு செல்லும். மீண்டும் நண்பகல் 12 மணிக்கு முல்லைத்தீவிலிருந்து புறப்பட்டு 1.30 மணிக்கு வன்னிவிளாங்குளம் பாடசாலைக்கு சென்று, அங்கிருந்து மாணவர்களை ஏற்றிய பின், அம்பாள்புரத்தை நோக்கிச் செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சேவையை மாணவர்களும் மக்களும் பயன்படுத்திக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .