2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

‘அரசாங்கம் வேடிக்கை பார்க்கின்றது’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“நாம் ஆறு மாதங்களாக வீதியிலிருந்து போராடுவதை நல்லாட்சி அரசாங்கம் வேடிக்கை பார்க்கின்றதே தவிர, நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில், தமது சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி, மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவு மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் பயனாக, மார்ச் 28 ஆம் திகதி கேப்பாப்புலவின் ஒரு பகுதியான பிலக்குடியிருப்பு விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில், படையினர் வசமுள்ள மிகுதிக் காணிகளையும் விடுவிக்கக்கோரி தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். எனினும் இப்போராட்டம் 6 மாதங்களாகவும் தீர்வின்றி தொடர்கின்றது.

இச்சந்தர்ப்பத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில், “எங்களுடைய நிலத்தைத்தான் நாங்கள் கேட்கின்றோம், எங்கள் நிலத்துக்காக இன்று நாங்கள் வீதியில் இறங்கிப் போராடி ஆறு மாதங்கள் ஆகி விட்டது.

ஆறு மாதங்களாகப் போராடுகின்ற எங்களை இந்த நல்லாட்சி அரசாங்கம், அதிகாரிகள் வேடிக்கை பாரக்கின்றார்களே தவிர, நிலத்தை விடுவிக்க எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. ஐந்து நாட்களில் விடுகின்றோம், 10 நாட்களில் விடுகின்றோம் என வாக்குறுதிகளை வழங்குகின்றார்கள். இந்த 6 மாதத்துக்குள் எத்தனையோ வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து விட்டோம். எனவே, எங்கள் நிலங்களை விடுவித்து நாங்கள் நிம்மதியாக சொந்தமண்ணில் வாழ வழிவகைகளை ஏற்படத்தித் தர வேண்டும்” எனத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .