2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘அரசியல் காரணங்களால், அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை’

Editorial   / 2018 மார்ச் 15 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.அகரன்

“அரசியல் கைதிகள் விவகாரத்தில், அரசியல் காரணங்களுக்காக அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி தயக்கம் காட்டி வருகிறார்” என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணாமலாக்கப்பட்டோரை இரண்டு வகையாக பார்க்கலாம். ஒன்று வலுக்கட்டாயமாக காணமல் ஆக்கப்பட்டவர்கள். அந்த வகையில் விடுதலைப்புலிகளின் 100 க்கு மேற்பட்ட போராளிகள் நேரடியாக குடும்ப அங்கத்தவர்கள் மூலமாக படையினரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்கள்.

இரண்டாவது, முகாம்களில் நேரடியாக கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.

அதுமட்டுமல்ல, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின் அவர்களுக்கான பதிவுகள் கூட இல்லாத முறையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.

வலுக்கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டவர்களின் நிகழ்ச்சி நிரல் ஒட்டுமொத்தமாக மறைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள் விவகாரத்தில், விடுவிக்கப்பட கூடியவர்கள் பெருமளவில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேரடியாக ஆயுதங்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கம், இந்த விடயங்களில் விட்டுக்கொடுப்பு செய்வதுக்கு இனவாதிகள் விடவில்லை. நாடாளுமன்றத்தினூடாக ஜனாதிபதி ஒரு பொது மன்னிப்பை வழங்கினால் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியும். அரசியல் காரணங்களுக்காக பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தயக்கம் காட்டி வருகிறார்.  பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கும் போதுதான் அரசியல் கைதிகளின் பிரச்சனை முடிவுக்கு வரும்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X