2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’அரசியல் தீர்வு முக்கியம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பிரதேசத்தின் அபிவிருத்தி  என்பது எமக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட எமக்கு அரசியல் தீர்வு முக்கியமென, பச்சிலைப்பள்ளிப் பிரதேசச் சபைத் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி தொடர்பான ஆராய்வு கலந்துரையாடல், கடந்த வெள்ளிக்கிழமை சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், ஒரு நிலையான தீர்வு இல்லாமல் மேற்கொள்ளும் அபிவிருத்தி அரசியல் சூழலில் பாதகமான மாற்றம் ஏற்ப்பட்டால் அழிந்துவிடுமெனவும் ஆகவே, நாம் பிரதேச அபிவிருத்தியை ஏற்படுத்துகின்ற அதேநேரம் அரசியல் தீர்வை பெறுவதற்கும் முயற்சிக்கவேண்டுமெனவும் தெரிவித்தார்.

பவ்ரல் அமைப்பினது ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் அனைத்து வட்டாரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பொது அமைப்புக்கள் மற்றும் பவ்ரல் நிறுவன தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .