2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘அலுவலகத்தை அக்கராயனில் இயங்க வைக்கவும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குப் பகுதியை இலக்காகக் கொண்டு செயற்படவுள்ள மாவட்டத்தின் இரண்டாவது நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தை அக்கராயனில் இயங்க வைக்குமாறு, அக்கராயன் குளத்தின் கீழான விவசாய அமைப்புகள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளன. 

தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக்குளத்தை அண்மித்ததாக நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் இயங்கிவரும் நிலையில், அக்கராயனில் இறுதியாக நடைபெற்ற பயிர்ச் செய்கைக் கூட்டத்தில் அக்கராயனில் இரண்டாவது நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் இயங்க உள்ளது.

இதன் மூலம் வன்னேரிக்குளம், கரியாலைநாகபடுவான்குளம், குடமுருட்டி, புதுமுறிப்பு அத்துடன் பூநகரியில் அமையவுள்ள புதிய குளம் என்பவற்றின் அபிவிருத்திகள், பூநகரியின் உவர்ப்பரம்பல்கள் தடுத்தல் போன்றவை அக்கராயனில் அமையவுள்ள கிளிநொச்சி மேற்கிற்கான நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் ஊடாக வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என விவசாயிகள் மத்தியில் தெரிவிக்கப்பட்டன.

ஆனால் தற்போது இரண்டாவது நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகமும் கிளிநொச்சி நகரத்திலேயே இயங்க வைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அறிகின்றோம்.

எனவே கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய குளமாகிய அக்கராயன்குளத்தின் கீழ் நீர்ப்பாசனப் பொறியியிலாளர் அலுவலகம் அமைவதே பொருத்தமானதாக அமையும்.

இதன் மூலம் கிளிநொச்சி மேற்கிற்கான குளங்களை அபிவிருத்தி செய்ய முடியும். 

திருமுறிகண்டி ஊடாக அக்கராயன் வரை சிறந்த வீதி உள்ளமையும் அடிப்படையாகக் கொண்டு அக்கராயனில் நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தை அமைப்பதற்கு, மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .