2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘அளம்பில் துயிலுமில்ல காணி சுவீகரிப்பை, ஏற்றுக் கொள்ள முடியாது’

சண்முகம் தவசீலன்   / 2018 மார்ச் 20 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த காணியில் ஒரு பகுதியை நிரந்தரமாக இராணுவம் கையகப்படுத்த முயல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே குறித்த காணியை இராணுவத்துக்கு வழங்க முடியாது எனவும் பலரும் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த காணியில் ஒரு பகுதியை இராணுவத்தினருக்கு சுவீகரிப்பதுக்கான அறிவித்தல் கிராம அலுவலர் ஊடாக ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த காணியை சுவீகரிப்பதுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரளை தொடர்பு கொண்டு கேட்டபோது,

“அளம்பில் பகுதியில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணியினை சுவீகரிப்பதுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இருந்தும் பிரதேச மக்களிடம் நான் தொடர்பு கொண்டு கேட்டபோது, சில இடங்களில் அறிவித்தல் ஒட்டப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது. இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று.

தங்கள் உறவுகளை பறிகொடுத்த அனைவரும் அந்த துயிலும் இல்லத்தில், ஆண்டில் ஒருதடவை கண்ணீர்விட்டு கதறி அழுது தங்கள் மனவேதனையினை போக்கி வருகின்றனர். கடந்த ஆண்டும் மக்கள் சகல இடங்களிலும் மாவீரர்களை நினைவுகூர்ந்து அவர்களின் பிணைப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறு இருக்கும் போது, படையினர் எங்கெங்கு காணிகளை சுவீகரிக்கமுடியுமோ சுவீகரித்து, மிகவும் முக்கியமான வரலாற்று இடங்களில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள்.

இதனை நோக்கும் போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரை மிக அதிகமாக குவித்து வைத்துக்கொண்டிருக்கும் அரசாங்கம், தொடர்ந்தும் மக்களின் நெஞ்சங்களில் ஏறி மிதிக்கும் செயலாக நாங்கள் இதனை பார்க்கின்றோம். இது ஏற்றுக்கொள்ளமுடியாதது. மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்துள்ள காணிகளை விட்டு படையினர் வெளியேறவேண்டும். சுவீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது. இது மக்களின் உதிரத்தோடு இருக்கும் காணிகள். அரசாங்கம் விட்டுக் கொடுக்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில், இதற்கான விளைவுகளை பொறுப்பெடுக்க வேண்டிய நிலை சம்மந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்” என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .