2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

‘ஆக்கிரமிப்பைத் தடுக்க இந்தியாவின் பங்களிப்பு வேண்டும்’

Editorial   / 2020 ஜூலை 09 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

தமிழர் தாயகத்தின் தனித்தவத்தைப் பாதுகாப்பதற்கு, வரலாற்று ரீதியாக மத, கலாசார, மொழி, பண்பாட்டு விடயங்களில் தமக்கு தாய்நாடாக இருக்கும் பாராத தேசம் தலையீடு செய்யவேண்டுமென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில், அவர் இன்று (09) விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்த அறிக்கையில், கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின் உறுப்பினரான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்து வருகின்ற கருத்துகளானது, இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு பாரிய அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளதெனவும் கூறினார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழர்களின் தாயகத்தில் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரமடைவதற்கான சாத்தியங்கள் உள்ளனவெனவும், அவர் தெரிவித்தார்.

அடுத்துவரும் நாள்களில் திருக்கேதீஸ்வரம் கோவில், மடு தேவாலயம் போன்றவைப் பற்றியும் திடுக்கிடும் வரலாறுகளை முன்வைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லையெனத் தெரிவித்த அவர், வரலாற்றைத் திரிவுபடுத்தும் கருத்துகள் ஈழத் தமிழ் மக்களை மட்டுமல்லாது பாரத தேசத்தையும் சீண்டுவதாக உள்ளதெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .