2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆதனவரி அதிகரிப்பை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன் , எஸ்.என்.நிபோஜன் 

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையால் மக்களிடம் அறவிடப்படுகின்ற ஆதனவரி அதிகரித்த வீதத்தில் அறவிடப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வர்த்தகர் ஒருவர், இன்று ​(23), சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.

இந்தப் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அதிகரித்த ஆதன வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கிளிநொச்சி நகரில்  உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டன.

கரைச்சி பிரதேச சபையால் கடந்தாண்டு  இறுதியில் இருந்து  ஆதனவரி அறவிப்பட்டு வருகிறது. இந்த ஆதன வரியானது இலங்கையில் எங்குமில்லாத அளவுக்கு அதிகரித்த வீதமான பத்து வீதமாக அறவிடப்பட்டுவருகிறது. எனவே, ஆதனவரியை 4 சதவீதமாகக் குறைக்குமாறு கோரியே, குறித்த வர்த்தகரால் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .