2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலம்

சண்முகம் தவசீலன்   / 2018 நவம்பர் 21 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

குறித்த பாலம் திருத்தப்பட வேண்டும் என பல தரப்பினராலும் பல தடவைகள் கோரப்பட்டபோதும் நிதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் எவையும் இடம்பெறவில்லை.

இந்நிலையில் தற்போது பாலத்தில் பல்வேறு இடங்களில் வெடிப்புக்களும் வீதி பாதுகாப்பு அற்றதாகவும் வீதியில் சில இடங்களில் தாழிறங்கியும் காணப்படுகிறது.

தற்போது குறித்த நீரேரியில் அதிக நீர் நிரம்பி காணப்படும் நிலையில் தற்காலிகமாகவேனும் வீதியில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X