2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆபத்தை எதிர்நோக்கும் கொக்காவில்

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன் 

முல்லைத்தீவு மாவடடத்தின் பல்வேறு பகுதிகளில், மணல் அகழ்வு, கிரவல் அகழ்வு, கருங்கல் அகழ்வு, மரக்கடத்தல் என்பன தொடர்ந்து இடம்பெற்று வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக, கொக்காவில் பகுதியில், அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி பாரியளவில் கிரவல் மண் அகழப்படுகின்றது. அதிகாரிகள் கண்டுகொள்ளாது இருக்கிறார்கள் ஏன்? இதன் உண்மைத்தன்மையை ஆராய்வதற்காக குறித்த இடத்துக்கு சென்றபோது  வழங்கப்பட்ட அனுமதிக்கு மேலதிகமாக கிரவல் அகழப்படுவதை அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மூலம் உறுதிப்படுத்த முடிந்தது.

புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு நிதி செலுத்தப்பட்டு அனுமதி பெறப்பட்டே கிரவல் அகழப்படுகின்றது. எனினும், A9 வீதியிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்பட்டு கிரவல் அகழப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர். பல்வேறு தேவைகளுக்காக வௌிமாவட்டங்களுக்கு இங்கிருந்து கிரவல் ஏற்றிச் செல்லப்படுகின்றது.

குறிப்பாக கிறவள் அகலும் போது பாரிய மரங்கள் அளிக்கப்படுகின்றன. மரங்கள் அளிக்கப்படும் போது, வளவள திணைக்களம் வேடிக்கை பார்க்கிறது. காட்டில் விறகு கொத்துபவர்களை பிடிப்பவர்கள் இவ்வாறு பாரிய அழிவை ஏற்படுத்தும் பணக்காரர்களை கண்டுகொள்ளாதது ஏன்?

இதேபோன்று பல ஆண்டுகளாக குறித்த பகுதியில் பல ஏக்கர் காணிகள் அக்காடுகள் அழிக்கப்பட்டு பாரிய குழிகள் தோண்டப்பட்டும் இன்றுவரை அவை மூடி மீள் மரநடுகை மேற்கொள்ளாதபோது, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் இந்த செல்வந்தர்களுக்கு அனுமதிகளை தொடர்ந்து எவ்வாறு வழங்குகின்றனர் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

குறிப்பாக, இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்துக்கு குறித்த சம்பவங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள  தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்ப படிவங்களை கொண்டு சென்றால், அவற்றை ஏற்க பின்னிருக்கும் யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை வீதி இலக்கம் 170இல் உள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியம் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பியும் அதற்கும் பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .