2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆளணி வெற்றிடத்தால் தீயணைப்புப்பிரிவை செயற்படுத்துவதில் தடை

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 டிசெம்பர் 06 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீயணைப்புப்பிரிவுக்கான ஆளணி வெற்றிடம் நிரப்பப்படாததால் அவசர தேவைகளின் போது, தீயணைப்புப்பிரிவை செயற்படுத்துவதில்  தடைகளும் தாமதங்களும் காணப்படுவதாக கரைச்சிப்பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

கடந்த செம்பரம்பர் மாதம் 11ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சின் 97 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வாகனங்கள் கரைச்சிப்பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கரைச்சிப்பிரதேச சபையின் தவிசாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது,

தீயணைப்புப்பிரிவுக்கான இயந்திரங்களும் கட்டடங்களும் எங்களிடம் தரப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான ஆளணி வெற்றிடம் நிரப்பப்படவில்லை.

பயிற்றுவிக்கப்பட்ட ஆளணி இன்மையால் கரைச்சிப்பிரதேச சபையினுடைய சிற்றூழியர்களை வைத்து குறித்த பிரிவை இயக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.

இதனால் அவசர தேவைகளின்போது, தீயணைப்புப்பிரிவை செயற்படுத்துவதில் தடைகளும் தாதமங்களும் காணப்படுகின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .