2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’இந்தக் காலம் பொன்னான காலம்’

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

இந்தக் காலம் பொன்னான காலமெனத் தெரிவித்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர், இந்தக் காலத்தில், தமது தேசிய ஒருமைப்பாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக தாயக பகுதியில் நிறுவிக்கொள்வதற்கான தீர்க்கமான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும் கூறினார்.

முல்லைத்தீவு – கைவேலிப் பகுதியில் உள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தேர்தல் போட்டியில் தாங்களும் கலந்துகொண்டு பணியை செய்துகொண்டிருப்பதாகவும் தமிழ் மக்கள் தங்கள் அவலங்களுக்கு விடைகொடுத்து மீள் எழுச்சிகொள்ளும் காலம் உருவாகி நிற்பதாகவும் தெரிவித்தார்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தமிழ்த் தேசிய அரசியல் இரண்டின் ஒருமைப்பாடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் தங்கி இருந்தது. ஆயுதப் போராட்டத்தின் வெற்றியானது, இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிக்கின்றது என்பதை காணக்கூடியதாக இருக்கிறதெனவும், அவர் கூறினார்.

ஆயுதப்போராட்டம் ஊடாக அடைந்த அனைத்து வெற்றிகளும் இன்று அரசியல் ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிமூலம் நிறுவிக்கொள்ளவேண்டிய தேவை உள்ளதெனத் தெரிவித்த அவர், கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதன் சிறப்பம்சமாக தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு தொடர்பில் 2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஒஸ்லோவில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சி அலகின் அடிப்படையில், இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், கதிர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தாங்கள் நினைத்தபடி தமிழ்த் தேசிய அரசியலைக் கொண்டுசெல்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருவதாதகத் தெரிவித்த அவர், தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ் மக்களுக்கான அரசயல் ரீதியான சுயாட்சி அலகு, உள்ளூர் சமஸ்டி முறை, ஒஸ்லோவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அதற்கு அமைவாக அந்த வழியில் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற வரைபு இன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

“இது நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமாக இருக்கின்றது. ஓர் இடைக்கால தன்னாட்சி வரைபு ஊடாக, கூட்டுறவு உள்ளூராட்சிக் கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, கல்வி, கிராம உட்கட்டமைப்பு தொடர்பான முக்கியன விடயங்கள் முன்னால் போராளிகளின் துன்பகரமான நிலையில் இருந்து மீட்டு எடுக்கவேண்டும் என்பது தொடர்பிலும் வெளியிடப்பட்டுள்ளது.

“இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் முழுமையாக எதிர்காலத்தில் நிறைவேற்றுவதற்காக நாங்கள் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முழுமையாக எமது ஆணையை வழங்க வேண்டும். பெரும்பான்மை சக்தியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். அதன் ஊடாகத்தான் முன்னேற்றகரமாக செல்லமுடியும்” எனவும், அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில், தமது மக்கள் தொடர்ந்தும் அவலநிலைக்குள் தள்ளப்படாமல் சுமூகமான சமாதானமானதும் நிதந்தரமானதுமான தீர்வுத் திட்டத்தைப் பெற்று, நிம்மதியாக தாயகப் பகுதியில் வாழவேண்டும் என்பதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமெனவும், அவர் கூறினார்.

அத்துடன், எதிர்வரும் தேர்தலில், வடக்கில்  5 கட்சிகள் கட்சிகளாகப் பிரிந்து நிற்பது தொடர்பிலும் எடுத்துரைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .