2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இரணைமடுகுளத்தின் கீழ் சிறுபோகச்செய்கை பாதிப்பு

எஸ்.என். நிபோஜன்   / 2018 பெப்ரவரி 20 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் நீர் மட்டம் தற்போது குறைவடைந்து காணப்படுவதால், சிறுபோக நெற்செய்கை கேள்விக்குள்ளாகியுள்ளது” என நீர்ப்பாசனத் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.

இரணைமடுகுளத்தில் 30 அடியாக நீர் சேமிக்கப்படுகின்ற போது, பெப்ரவரி, மார்ச் மாதங்களில் குளத்தின் நீர் மட்டம் 24 அடியாக காணப்படும். இவ்வாறான வேளைகளில் இரணைமடுகுளத்தின் கீழ் 8ஆயிரம் ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கடந்த 2 ஆண்டுகளாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ், இரணைமடுகுளம் புனரமைக்கப்பட்டு குளத்தின் நீர் கொள்ளளவு 36 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் கடந்த பருவ மழை குறைவடைந்தமையால், புனரமைக்கப்பட்ட குளத்தில் போதுமான அளவு நீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது நீர் கொள்ளளவு 16.6 அடியாகவே காணப்படுகிறது. இந்த நிலை தொடருமானால் இவ்வருடம் சிறுபோக விதைப்பு சாத்தியப்படாது போய்விடும் என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் மழை பெய்தால், குளத்தின் நீர் மட்டம் உயர்வடையும். அவ்வாறாயின், சிறுபோகம் சாத்தியமாகும். இல்லை எனில் தற்போதுள்ள குளத்தின் நீர் மட்டத்தைக் கொண்டு சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது சாத்தியமற்றது.

குளத்தின் நீர் மட்டம் தொடர்ச்சியாக 10 அடியாக பேணப்பட வேண்டும். எனவே எஞ்சிய ஆறு அடி நீரில் சிறுபோகம் செய்வது என்பதுக்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவுள்ளது எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .