2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரணைமடுக்குளத்தின் கீழ் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 மார்ச் 06 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள நீரைப்பயன்படுத்தி இவ்வாண்டு 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதென இன்று (06) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாரிய மற்றும் நடுத்தர சிறிய குளங்களின் நீர்மட்டம் குறைவாகக் காணப்படுவதுடன், சில குளங்கள் நீர் வற்றிக்காணப்படுகின்றன.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளம் மற்றும் புதுமுறிப்;புக்குளம் ஆகியவற்றிலிருந்து நீரைப்பயன்படுத்தி குறிப்பிட்ட நிலப்பகுதிகளில் சிறுபோகச்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலை காணப்படுகின்றது.

36 அடி நீர்கொள்ளளவைக் கொண்ட கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் தற்போது, 16 அடி மூன்று அங்குலமாகக் காணப்படுகின்றது.

இதில் 10 அடி வரையான தண்ணீரை குளத்தின் பாதுகாப்புக்கருதி தேக்கி வைப்பது எனவும் ஏனைய நீரைப்பயன்படுத்தி சிறுபோகச்செய்கை மேற்கொள்வதாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோகசெய்கை தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று (06) கிளிநொச்சி இரணைமடுத்திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் இரணைமடு விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகள், விவசாயத்திணைக்கள அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் நீரைச்சிக்கனமாக பயன்படுத்தி; வெற்றிகரமான விவசாயச்செய்கையை மேற்கொள்வதென்றும்; அதன்படி குளத்தின் நீரைக்கொண்டு 900 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகப்பயிர்ச்செய்கை மேற்கொள்வதென்றும் குறித்;த பயிர்ச்செய்கையை இரணைமடு குளத்தின் கீழான பன்னங்கண்டி கமக்கார அமைப்பின் கீழ் உள்ள பயிர்ச்செய்கை நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டதுடன், இது தொடர்பான இறுதி தீர்மானம் அடுத்த வாரமளவில் மாவட்ட செயலர் தலைமையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடவில் எடுக்கப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .