2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 நவம்பர் 16 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 30 அடி 11 அங்குலமாக உயர்வடைந்துள்ளதுடன் 23 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி நேற்று (15) இரவு பதிவாகியுள்ளதாக இரணைமடு நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கஜா புயலின் தாக்கம் உணரப்படும் என்றும் அதன் போது 100 மில்லி மீற்றர் வரையான மழை பெய்யலாம் என்றும் வழிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியிருந்தது.

இந்நிலையில், மாவட்டத்தின் பாரிய குளமான இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 30 அடி 11 அங்குலமாக உயர்வடைந்துள்ளதுடன் 23 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்;ளது.

அத்துடன் அக்கராயன் குளத்தின் நீர் மட்டம் 22 அடி 10 அங்குலமாகவும் காணப்படுவதுடன் 31.2 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது

கல்மடுக்குளத்தின் நீர் மட்டம் 24 அடியாகக் காணப்படுகின்றது.

கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர் மட்டம் 09 அடியாக காணப்படுவதுடன் 52.1 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X