2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரணைமடுக்குளத்தில் தற்போதுள்ள நீரின் அளவைக்கொண்டு பயிர்ச் செய்கை

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 மார்ச் 01 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் தற்போதுள்ள நீரின் அளவைக்கொண்டு 900 ஏக்கர் நெற்செய்கையும் 300 ஏக்கரில் சிறுதானியச்செய்கையும் மேற்கொள்ளத்தீர்மானித்துள்ளதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசனப்பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர்மட்டம் மிகக்குறைவாகவே காணப்படுகின்றது.

இந்நிலையில், 36 அடி கொள்ளளவுடைய இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் தற்போது 16 அடியாகக் காணப்படுகின்றது.

காலபோக அறுவடை நிறைவு பெற்றுள்ள நிலையில், இரணைமடுக்குளத்தின் தற்போதுள்ள நீரின் அளவைக் கொண்டு கடந்த ஆண்டு போல் குறிப்பிட்ட அளவு சிறுபோகச்செய்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாவட்ட பிரதி நீர்ப்பாசனப்பொறியியலாளரிடம் வினவியபோது,

இரணைமடுக்குளத்தின் பாதுகாப்பு, நிலத்தடி நீர் என்பவற்றைக்கருத்திற் கொண்டு நீரை 10 அடி வரை பேணுவதாகவும் மீதமாகவுள்ள நீரைப்பயன்படுத்தி மகிழங்காடு கமக்கார அமைப்புக்குட்பட்ட  பகுதியில் 900 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் நெற்செய்கையினையும் 300 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் சிறுதானியச்செய்கையும் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, இருக்கின்ற நீரைச்சிக்கனமாகப் பயன்படுத்தி பயிர் செய்கைகளை மேற்கொள்வதால் கடந்த ஆண்டு போல் விவசாயிகள் தமக்குத்தேவையான விதை நெல்லை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும். இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை அடுத்த வாரத்தில் நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .