2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘இலங்கையில் பெண்களின் நிலை கவலைக்குரியது’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 மார்ச் 08 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இலங்கையில் வாழும் சகல சமூகங்களிலும் பெண்களுக்கெதிரான வன்முறையென்பது கவலைக்குரிய ஓர் விடயமாகக் காணப்படுகின்றது” என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் தூதுவர் போல் கோட்ப்றே தெரிவித்துள்ளார்.

வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் இன்று (08)  கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பதில் தூதுவர் உரையாற்றுகையில்,

இன்று 43ஆவது சர்வதேச பெண்கள் தினம் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்படுகின்றது. இருந்தும், பெண்கள் இன்றும் விழிப்பற்ற நிலையிலேயே காணப்படுகின்றார்கள். காரணம் அந்த நாடுகளில் காணப்படுகின்ற சட்டவாக்கங்கள் பொருளாதாரத்தில் பங்கு பற்றுதல் மற்றும் தொழில்துறை சட்டங்கள் காரணமாகவும், பொது நிகழ்வுகள், போக்குவரத்து செய்யும் இடங்கள், பொதுச்சூழல் என்பவற்றிலும் பெண்கள் நெருக்குதல்களை எதிர்கொள்கின்றார்கள்.

பெண்கள் தினமானது பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவதுக்கும், பாகுபடுத்தல்களை முடிவுக்கு கொண்டு வருவதுக்கும் ஒரு போராட்டமாக அமைகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரையில் பெண்களின் உரிமை என்பது ஓர் முக்;கியமான அம்சமாகும்.

உலகில் ஐரோப்பிய ஒன்றியமானது பெண்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கையைப் பொறுத்த வரையில் பெண்களின் நிலை கவலைக்குரியதொன்று.

அதாவது இலங்கையில் வாழும் சகல சமூகத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஓர்  கவலைக்குரிய விடயமாக காணப்படுகின்றது” என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .