2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலவங்குடா கடற்பகுதியில் இலகுவாக தொழில் செய்யக்கூடிய சூழல்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 நவம்பர் 13 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி கிராஞ்சி இலவங்குடா கடற்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்திய இழுவைப்படகுகளை கரைக்குக்கொண்டு வந்துள்ளமையால் தொழிலுக்கு சென்றுவரக்கூடியதாக இருப்பதாக கிராஞ்சி கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கடற்பரப்புக்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட சுமார் 35 இற்கும் மேற்பட்ட இந்திய இழுவைப்படகுகள் நீதிமன்றக்கட்டளைகளுக்கு அமைவாக இதுவரை காலமும் கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்துக்குட்பட்ட கிராஞ்சி இலங்குடா சிறுகடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் நிறுத்தி வைக்கப்;பட்டிருந்தன.

இதனால் சுமார் 59 இற்கும் மேற்பட்ட மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டிருந்தது.

குறித்த படகுகளை அகற்றி தொழில் செய்யக்கூடிய சூழலை உருவாக்கித்தருமாறு கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதேவேளை பூநகரிப்பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திலும் இவ்விடயம் சுட்டிக்காட்;டப்;பட்டிருந்தது.

இதனையடுத்து, சிறுகடற்பகுதியில் நிறுத்திவைக்கப்;பட்டிருந்த மேற்படி இந்திய இழுவைப்படகுகள் கடற்கரையோரத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .