2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’உயிலங்குளம் அணைக்கட்டினைப் புனரமைப்பதற்கான தீர்மானங்கள் கிடைக்கவில்லை’

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

மூன்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடைபெற்றும் உயிலங்குளம் அணைக்கட்டினைப் புனரமைப்பதற்கான தீர்மானங்கள் கிடைக்கவில்லையென, துணுக்காய் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். பிரியதர்ஷினி தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் உயிலங்குளம் அணைக்கட்டு சேதமடைந்து உடைப்பெடுப்பதற்கான சூழல் ஏற்பட்ட போது, விவசாயிகளால் மண் மூடைகள் அடுக்கப்பட்டு அணைக்கட்டு உடைப்பெடுக்காமல் பாதுகாக்கப்பட்டது.

அணைக்கட்டு சேதமடைவதற்கான காரணம், அணைக்கட்டுக்கு மேலாகவே துணுக்காய், அக்கராயன் போக்குவரத்துகள் நடைபெறுவதால் ஆகும். அணைக்கட்டைப் புனரமைப்பதற்கு குளத்தின் கீழான பகுதியில் புதிய வீதி ஒன்று அமைக்க வேண்டியுள்ளது.

அதனை வீதி அபிவிருத்தித் திணைக்களம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதன் காரணமாக, எமது குளத்தின் அணைக்கட்டைப் புனரமைக்க முடியாது உள்ளோம். கடந்த 30ஆம் திகதி நடைபெற்ற துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இவ்விடயங்களைத் தெரியப்படுத்தி இருந்தேன்.

உயிலங்குளம் அணைக்கட்டுக்கு கீழாக புதிய வீதியை அமைப்பதன் மூலம் அணைக்கட்டை விரைவாகப் புனரமைக்க முடியும். இப்புனரமைப்புக்கு பன்னிரண்டு மில்லியன் ரூபாய் வரை தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .