2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்

Editorial   / 2018 ஜூலை 04 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற எலும்புக்கூடு அகழ்வுப் பணிகள் தொடர்பில், நேற்று (04) செய்திச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை, அங்கு கடமையில் இருந்த பொலிஸார் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

இதையடுத்து, வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழ்வுப் பணிகள், இன்று (04) 27ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, இன்று (04) காலை அகழ்வுப் பணி தொடர்பில் செய்திச் சேகரிக்க ஊடகவியளாலர்கள் சென்ற நிலையில், செய்திச் சேகரிப்பதற்கு இடையூறாக அங்கிருந்த பொலிஸார்

செயற்பட்டதைத் தொடர்ந்து, வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

இதன்போது கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் விதமாக, பொலிஸார் புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .