2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஊரடங்குச் நேரத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

Editorial   / 2020 மார்ச் 31 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன் 

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில்,  ஊடக அலுவலகமொன்று அடித்து உடைக்கப்பட்ட சம்பவமொன்று, கிளிநொச்சியில், நேற்று (30) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் காயமடைந்தார்.

இணையத்தளம் ஒன்றின் ஊடக அலுவலகம் ஒன்றுக்குள் நேற்று (30) மாலை   உள்நுழைந்த  ஐந்து பேர் கொண்டு குழுவினர், எவ்வித கேள்விகளுமின்றி அங்கு கடமையில் இருந்த சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன், அங்கிருந்த மடிக்கணிணி, உள்ளிட்ட சில பொருள்களை  அடித்து நொறுக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போது, இன்று காலையே, பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

தாக்குதல் மேற்கொள்ள வந்தவர்களின் ஒருவரின் புகைப்படம் தங்களிடம் இருப்பதாக, அந்த அலுவலகத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .