2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஊற்றுப்புலம் ஒடுக்கு பாலம் புனரமைப்பு

எஸ்.என். நிபோஜன்   / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஊற்றுப்புலம் ஒடுக்குப் பாலம், 90 மில்லியன் ரூபாய் செலவில்  புனரமைக்கப்பட்டு வருவதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

33 மீற்றர் நீளமும் 4.2 மீற்றர் அகலமுடைய குறித்த பாலத்தின்  கொங்றீட் பணிகளுக்கு, 35 மில்லியன் ரூபாவும், இரும்பு பாலத்துக்கு  55 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

“மேற்படி பாலம்,  ஆயிரம் பாலம் திட்டத்துக்குக் கீழ் கொண்டுவரப்பட்டதோ அல்லது  தற்போது ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டமோ அல்ல. கடந்த சில வருடங்களுக்கு முன்னர்,  ஜக்கிய இராஜ்ஜியத்தின் நிதியுதவியுடன்,  முன்னைய அரசின் காலத்தில், குறித்த பாலம் அமைக்கும் பணி   ஆரம்பிக்கப்பட்டு, தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது” என்று, அதிகாரிகள் தெரிவித்தனர். 

“இடையில் ஏற்பட்ட பருவ மழை காரணமாக, கடந்த  எட்டு மாதங்களாக  குறித்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில்,  தற்போது மீண்டும் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிள் மேலும்  கூறினர்.

இப்பாலத்தின் புனரமைப்புப் பணிகள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முடிவடையுமென்றும் அதிகாரிகள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X