2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘எமது சொந்த இடங்களில் குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது’

Editorial   / 2018 மார்ச் 20 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.அகரன்

“எமது சொந்த இடங்களில் இன்னும் குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது” என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி அனந்தன் தெரிவித்தார்.

நேற்று (19) வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

“கல்விச் சமூகம் சார்ந்தவர்களும், மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றவர்களுக்கும் பாரிய பொறுப்பு ஒன்று உள்ளது. எங்களது பிரதேசம் நீண்ட காலமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்பதால் நாங்கள் கல்வி, பொருளாதார வளர்ச்சியிலே சமூக கலை கலாச்சாரங்களிலே முன்னோக்கி செல்லவேண்டியுள்ளது.

ஆகவே நாங்கள் அனைவரும் இணைந்து எங்கள் சமூகத்தை, இனத்தை முன்மாதிரியாக கொண்டு வழிகாட்ட வேண்டியது அல்லது இந்த சமூகத்துக்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

வடக்கு, கிழக்கில் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் பலருக்கு தாய், தந்தை அல்லது இருவருமே இல்லாத நிலை காணப்படுகின்றது. ஆகவே இந்த நிலைமைகள் மாற்றப்பட வேண்டும்.

போருக்கு பிற்பாடு எமது மக்கள் சொந்த இடங்களில் குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த யுத்தம் இல்லாத மூண்று வருட காலப்பகுதிக்குள் பல்வேறு விடயங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. ஆனால் எங்களது தலைவர்கள் அமைதி, பொறுமை காத்திருக்கிறார்கள். இவற்றிலிருந்து நாம் மீண்டு எழ வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு கல்வி ஒன்று மட்டுமே” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .