2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எலும்புக்கூடுகளின் மாதிரிகள் புளோரிடாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2019 ஜனவரி 09 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 26 ஆம் திகதி புளோரிடாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ இன்று புதன்கிழமை (9) தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டு அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

227 ஆவது நாளாக அகழ்வு பணியானது இன்றும் (09) சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட மழை காரணமாக அகழ்வு செய்யப்படும் பகுதி பாதிப்படைந்திருந்தது. அதனால் வளாகத்தை நாங்கள் முழுமையாக விரிவுபடுத்தியுள்ளோம்

இந்த நிலையில் அவற்றை சீர்செய்து அகழ்வு இடம் பெறும் பகுதியைச் சுற்றி மறைப்பு அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் 6 மாதிரிகளை தெரிவு செய்துள்ளோம். குறித்த மாதிரிகளானது வெவ்வேறு மண் தட்டுக்களில் இருந்து எடுக்கப்பட்ட பொதுவான மாதிரிகளாக உள்ளன.

குறித்த மாதிரிகளில் எலும்பு மற்றும் பற்கள் உள்ளடங்களாக பெண்கள் என சந்தேகிக்கின்ற மாதிரிகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.

மாதிரிகள் அனைத்தும் காபன் பரிசோதனைக்காக புளோரிடாவுக்கு  இம்மாதம் 26 ஆம் திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதன்போது மரணம் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் அறிந்து கொள்ள முடியும் என மேலும் தெரிவித்தார்.

தற்போது வரை 288 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 282 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .