2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கசிப்பு விற்பனையைக் கட்டுப்படுத்த கோரிக்கை

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கசிப்பு விற்பனைகளைக் கட்டுப்படுத்த உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, 41 குடும்பங்கள் கையொப்பமிட்ட கடிதங்களை பல்வேறு தரப்புகளுக்கும் கிராம அபிவிருத்திச் சங்கம் ஊடாக மக்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

கிளநொச்சி பெரியபரந்தன் பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கசிப்பு உற்பத்தி, விற்பனைகளால் இப்பகுதிகளில் மக்கள் குடியிருக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

வேறு இடங்களிலிருந்து இப்பகுதிகளுக்கு இரவு வேளைகளில் கத்தி, வாள், பொல்லுகளுடன் செல்லும் சிலர் குழுக்களாக மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.

இப்பிரச்சனைகளை உரிய அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இப்பகுதியிலுள்ள 44 குடும்பங்கள் கையெப்பமிட்டு, மாவட்ட செயலர், பிரதேச செயலாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், கிராம அலுவலர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X