2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கனிய மணல் அகழ்வது தொடர்பில் ஆராய குழு

Editorial   / 2018 ஜூன் 25 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் இடம்பெறும் கனிய மணல் அகழ்வு தொடர்பில் ஆராயவென, குழுவொன்றை நியமிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் பகுதியில் கனிய மணல் அகழ்வது தொடர்பில் அரசியல் தலைவர்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று, முல்லைத்தீவு மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில், இன்று (25) நடைபெற்றது. இதன்போதே, இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது, பகுதியில் கணியமணல் அகழ்வது தொடர்பில், அரசாங்கத்துடன் உரிய முறையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை என, குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து, இதற்கென குழு ஒன்றை நியமித்து, அந்தக் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், மாகாண முதலமைச்சரால் 7 பேரும் வர்த்தக வாணிப அமைச்சரால் 5 பேரும் மாவட்டச் செயலாளரால் 3 பேரும் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபை தவிசாளர் மற்றும் குறித்த வட்டார உறுப்பினர்கள் உள்ளடங்களாக 17 பேரும் கலந்துரையாடி, அறிக்கையிட்டப் பின்னரே, இவ்விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .