2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கரைச்சி பகுதியில் யாசகத்துக்குத் தடை

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில், நிரந்தரமாக வசிப்பவர்கள் யாசகம் செய்தலும் யாசகம் வழங்குவதும், ஏப்ரல் 1ஆம் திகதியில் இருந்து உடன் நடைமுறைக்கு வரும் வகையில், கரைச்சி பிரதேச சபையால் தடை செய்யப்பட்டுள்ளதாக, கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவித்தார்.

 

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், மார்ச் 11ஆம் திகதியன்று நடைபெற்ற சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவகவே, இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாசகம் செய்வதைத் தொழிலாக மேற்கொள்ளும் நபர்களுக்கு, வாழ்வாதாரம உதவிகளை வழங்குவதற்கும் சபை தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த அவர், வெளியே இருந்து வந்து, இந்தப் பகுதியில் யாசகம் செய்வது தவிர்க்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

அத்துடன், பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட வர்த்தக நிலையங்கள், சேவைச் சந்தை, பொது இடங்களில் யாசகம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X