2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கழிவுத் துணிகளை அகற்றுமாறு காலக்கெடு

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி - அம்பாள்குளம் கிராமத்தில், தனியார் ஒருவரின் காணிக்குள் குவிந்து காணப்படும் ஆடைத் தொழிற்சாலைக் கழிவுத் துணிகளை, மூன்று வார காலத்துக்குள் அகற்றுமாறு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம், காலக்கெடு விதித்துள்ளது.

கிளிநொச்சி - அம்பாள்குளம் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணிக்குள் குவிந்து காணப்படும் ஆடைத் தொழிற்சாலைக் கழிவுத் துணிகளால், அயலில் வாழ்கின்ற பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆடைத் தொழிற்சாலையின் கழிவுத் துணிகளை, தனிநபர் ஒருவர் கொள்வனவு செய்து, அதனை மூலப்பொருளாகப் பயன்படுத்தி, சிறு தொழில் முயற்சி ஒன்றில் ஈடுப்பட்டு வருகின்றார். அவர் தான் கொள்வுனவு செய்யும் கழிவுத் துணிகளை, தனது காணியில் வெட்ட வெளியில் களஞ்சியப்படுத்தியுள்ளார். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பெருமளவு கழிவுத் துணிகள், இவ்வாறு குப்பை மேடு போன்று காணப்பட்டு வருகிறது.

அத்தோடு, தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக, மேற்படி கழிவுத் துணிகள் நனைந்து வருவது மாத்திரமன்றி, அருகில் உள்ள கழிவு வாய்க்கால் நீரில் அடித்துச் செல்லப்பட்டு சுற்றியல் பிரதேசங்களில் சிதறிக் காணப்படுகிறது.

இதனால், சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் பொது சுகாதார பரிசோதகரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவரால் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்தே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .