2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காட்டுயானைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் மதிப்பீடு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2019 மார்ச் 13 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி கல்மடுப்பிரதேசத்தில் காட்டுயானைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மற்றும் கண்டாவளைப் பிரதேச உத்தியோகத்தர்கள், பார்வையிட்டு அழிவுகள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்மடு 10 ஏக்கர் திட்டம் நாவல்நகர், றங்கன் குடியிருப்பு போன்ற பகுதிகளில் தொடர்ச்;சியாக காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக காட்டுயானைகளால் பெருமளவான தென்னை மரங்கள் மற்றும் பயன்தரு மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் குறித்த பிரதேசத்தில் காட்டு யானை துரத்;தியதில் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இவ்வாறு ஊர்மனைக்குள் வரும் யானைகள் பிளாஸ்ரிக் கழிவுகள் கடதாசிகள் என்பவற்றை உட்கொள்வதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப்பிரதேசத்தில் காட்டுயானைகளால் ஏற்பட்டு வருகி;ன்ற பாதிப்புக்கள் மற்றும் சேதங்கள் தொடர்பில் பிரதேச மக்களால் கிராம அலுவலர்கள் மற்றும் பிரதேச செயலகத்துக்கு செய்யப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து கண்டாவளைப்பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவப்பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மேற்படி கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுக்கும் பிரதேச மக்களுக்கும் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புக்கள் தொடர்பிலும் மதிப்பீடுகளை செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .