2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்தை நம்பவில்லை’

Editorial   / 2019 மே 24 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்தை தாம் நம்பவில்லையென, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பொன்று இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், கடந்த 16ஆம் திகதி கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் திறந்துள்ளமை தொடர்பில் அவர் கருத்து தெரிவித்தார். அன்றய தினம் குறித்த அலுவலகத்தின் ஆணையாளரை சந்தித்த விடயங்கள் தொடர்பிலும் அவர் குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்தை தாம் நம்பவில்லை எனவும், அதன் ஊடாக வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அதிகளவான சாட்சிகளை கொண்ட நபர்கள் சார்பில் வழக்கு ஒன்றை மேற்கொண்டு, அதன் ஊடாக நல்ல தீர்வொன்றை பெற்று தந்தால் தாம் குறித்த அலுவலகத்தை நம்புவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை தொடர்ந்து அமைச்சர் மனோ கணேனை சந்தித்ததாகவும், அவரிடம் இரகசிய முகாம்கள் இருப்பது தொடர்பில் தெரிவித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

இதேவேளை காணாமல் ஆக்க்க்பட்டவர்களின் உறவுகளிற்கு மாதாந்தம் 6,000 வழங்குவது என்பது புாராட்டத்தை பலவீனப்படுத்தும் செயல் எனவும், அதனை கட்டாயமாக வழங்க கூடாது என தாம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

குறித்த பணத்தினை கட்டாயப்படுத்தி வழங்க மாட்டோம் என அமைச்சர் இதன்போது வாக்குறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .