2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காணிகளை பரிசீலிக்க நடவடிக்கை

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முள்ளிவாய்க்காலில், படையினருக்கு வழங்கப்படவுள்ள காணிகளைப் பரிசீலிக்கவுள்ளதாக, பிரதேச செயலத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2012, 2013ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள காணிகளைப் படையினருக்கு வழங்க பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்ட போதும், மாவட்ட மட்டக் காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டத்தில் இதுவரை, அக்காணிகள் தொடர்பில் பரிசீலிக்கப்படாமல் உள்ளது. 

இந்நிலையிலேயே, மீண்டும் அக்காணிகளைப் பரிசீலிக்க வேண்டியுள்ளதாக, பிரதேசச் செயலத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கமைய, படை முகாம் காணிகளின் விவரங்கள் வருமாறு, 

முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட வௌ்ளாம் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் அமைந்துள்ள படை முகாமுக்காக 4 ஏக்கர் 01றூட் 35.35 பேர்ச் காணியை,“29 SLNG D Company”இன் பாதுகாப்புப் படைக் கட்டளைத் தளபதி அனுமதி கோரியுள்ளார். 

இதேவேளை, முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட கரையா முள்ளிவாய்க்கால் கிராமத்தில் அமைந்துள்ள படை முகாமுக்குச் சொந்தமாக 82,089 ஹெக்டெயர் 20.27 ஏக்கர் காணியை, “14th Battalion Infantry Regiment” (14th Submarinr Yard)இன் பாதுகாப்புப் படைக் கட்டளைத் தளபதி அனுமதி கோரியுள்ளார். 

அத்துடன், முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட கரையா முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள படை முகாமுக்காக, 83,697 ஹெக்டெயர் காணியை, “68 1 Brigade Camp”இன் பாதுகாப்புப் படைக் கட்டளைத் தளபதி அனுமதி கோரியுள்ளார். 

அம்பலவன் பொக்கணை கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட பட்டடிக்கரை கிராமத்தில் அமைந்துள்ள படை முகாமுக்காக 20 ஏக்கர் 01 றூட் 15.6 பேர்ச் காணியை, “14th Battalion Vijabahu Infantry Regiment”இன் பாதுகாப்புப் படைக் கட்டளைத் தளபதி அனுமதி கோரியுள்ளார். 

முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட வலைஞர்மடம் கிராமத்தில் அமைந்துள்ள படை முகாமுக்காக 7 ஏக்கர் 01 றூட் 39 பேர் காணியை “14th Vijabahu Infantry Regiment”இன் பாதுகாப்புப் படைக் கட்டளைத் தளபதி அனுமதி கோரியுள்ளதாக, பிரதேசச் செயலகப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .