2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காந்தியின் நினைவேந்தலுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவில், காந்திக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேசசபையின் அமர்வு, நேற்று நடைபெற்றது.

இதன்போதே,  உறுப்பினர்களான சின்னராசா - லோகேஸ்வரன் மற்றும் தவராசா - அமலன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

எனினும், ஏனைய உறுப்பினர்கள் இந்த நினைவேந்தலுக்கு ஆதரவளித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 2ஆம் திகதியன்று, மகாத்மா காந்திக்கு முல்லைத்தீவில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இரு உறுப்பினர்களான லோகேஸ்வரன் மற்றும்  அமலன் ஆகியோர் கடும் எதிர்பை வெளியிட்டுள்ளனர்.

அதாவது, உயிர் தியாகங்கள் பல நிகழ்ந்த இந்த மண்ணில் காந்திக்கு நினைவேந்தல் நடாத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. என அவர்கள் தமது கடும் எதிர்புகளை வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஏனைய உறுப்பினர்கள் இந்நிகழ்வுக்கு பூரண ஆதரவு வழங்குவதால், நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுமென தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .