2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காரில் இருந்து கேரள கஞ்சா மீட்பு; ஒருவர் கைது

Editorial   / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

75 இலட்சம் ரூபாய் பெறுமதியாக கேரள கஞ்சாவுடன் ஒருவரை இன்று (11) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தொண்டி பகுதியைச் சேர்ந்த அலி என்பவரே, இவ்வாறு கைதுசெய்யப்ப்ட்டுள்ளார்.

மன்னார் வளைகுடா கடல் வழியாக, இலங்கைக்கு கள்ளத் தோணியில் கேரளா கஞ்சா கடத்த இருப்பதாக  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து,  ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மாவட்ட சிறப்பு பிரிவு காவல்துறை மற்றும் கியூபிரிவு போலிஸார் தீவிர  சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது, மண்டபம் அருகே பிரப்பன்வலசை கடற்கரைப் பகுதியை நோக்கி வேகமாக வந்த காரை நிறுத்துமாறு பொலிஸார் சமிஞ்கை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் சென்றதையடுத்து, பொலிஸார் விரட்டிச் சென்று  காரை மடக்கி பிடித்தனர்.

இதன்போது, காரில் இருந்தவர்களில் ஒருவரை மாத்திரம் பொலிஸார் கைதுசெய்தனர். ஏனையோர் தப்பிச்சென்றுள்ளனர்.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான 85 பக்கெட்டுகளில் இருந்த 165 கிலோகிராம்  கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .