2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘கால்நடைகளைக் கட்டுப்படுத்தவும்’

Editorial   / 2018 மே 27 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்துமாறு, புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தவிசாளர் செ.பிறேமகாந்த் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது குறித்து, அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளில், கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையால், நாள்தோறும் பல வீதி விபத்துகள் ஏற்பட்டு, காயங்களும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன எனச் சுட்டிக்காட்டினார்.

எனவே, இவ்விடயம் தொடர்பில், கால்நடை வளர்ப்போர் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்த அவர், தவறின் பிரதேசசபைச் சட்ட விதிகளுக்கமைய, கட்டாக்காலிகளாக பிரதான வீதிகள், நகர்ப் பகுதிகள் மற்றும் ஏனைய வீதிகளில் நடமாடுகின்ற கால்நடைகளைக் கட்டுப்படுத்த, சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .