2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘கிணற்றை விடுவிக்க வேண்டும்’

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

இராணுவ முகாமிலுள்ள கிணற்றைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு, பூநகரி பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

“தற்போது நிலவுகின்ற வரட்சியால், பூநகரி பகுதிக்கு முக்கொம்பன், பரந்தனில் இருந்தே குடிநீர் எடுத்து வரவேண்டியுள்ளது.

“கிளிநொச்சி மாவட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பாடசாலைகள், குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், பூநகரியில் மட்டும் 12 பாடசாலைகளுக்குப் பூநகரிப் பிரதேச செயலகம் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது.

“பூநகரியின் பல பகுதிகள் உவரடைந்ததன் காரணமாக, ஏற்கெனவே குடியமர்ந்துள்ள குடும்பங்கள், நீண்ட தூரங்களுக்குச் சென்று குடிநீரைப் பெற்று வந்த நிலையில், அந்த நீர் மூலகங்களும் தற்போது நிலவுகின்ற வரட்சியால் வற்றியுள்ளன.

“இதனால், நீர்த்தாங்கிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரையே நம்பியிருக்க வேண்டிய நிலையில், நூற்றுக் கணக்கான குடும்பங்கள் உள்ளன.

“பூநகரி வாடியடிச் சந்தியில் முன்னர் வைத்தியசாலை இருந்த வளாகத்தில், சிறந்த நீரூற்று உள்ள கிணறு உள்ளது. வைத்தியசாலை வளாகம் தற்போது இராணுவ முகாமாக உள்ள நிலையில், தற்போது இக்கிணற்றை, இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

“இக்கிணற்றை மக்களின் குடிநீருக்குப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு வலியுறுத்தி வரும் நிலையில், இக்கிணறு இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதனை விடுவிப்பதன் மூலம், பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும்”  எனவும், பூநகரி பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .