2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிளி. மா மரங்கள் தென்னிலங்கைக்குப் பறக்கின்றன

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில், பெருமளவிலான மா மரங்கள் அழிக்கப்பட்டு, தென்னிலங்கைக்குக் கொண்டுச் செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிலங்கையில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்துக்கு வருகைத் தரும் சிலர், அங்கு தற்போது மீள்குடியமர்ந்துள்ள குடும்பங்கள் நடுகைச் செய்துள்ள மாமரங்களை, 1,000 ரூபாய் தொடக்கம் 1,500 ரூபாய் வரை மர உரிமையாளர்களிடம் வழங்கி வெட்டிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, அக்கராயன், ஸ்கந்தபுரம், ஆனைவிழுந்தான்குளம், வன்னேரிக்குளம் ஆகிய கிராமங்களில் இருந்தே, பெருமளவிலான மா மரங்கள் வெட்டிச் செல்லப்படுவதுடன், கிராமங்களில் உள்ள சிலரின் ஒத்துழைப்புடன், மக்கள் குடியேறாத காணிகளில் உள்ள மா மரங்களும் வெட்டி எடுத்துச் செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நூறாண்டுகளுக்கும் மேலாக பயன்தரக் கூடிய மா மரங்கள் அழிக்கப்படுவதன் காரணமாக, பெரும் சூழலியல் பிரச்சினைகள் உருவாகக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கெனவே, மாவட்டத்தின் காடழிப்பு உச்சம் பெற்றுள்ள நிலையில், மா மரங்களையும் மக்கள் குடியிருக்கும் காணிகளில் இருந்து அழித்து வருவது, நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளது.

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் குளம் ஆகிய கிராமங்கள் உவராபத்தை எதிர்நோக்கியுள்ள கிராமங்களாகும். இக்கிராமங்களில் உள்ள மரங்களை அழிப்பது, கிராமங்களை முழுமையாக அழிவுக்குக் கொண்டு சென்றுவிடும் என, ஏற்கெனவே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், மாமரங்கள் அழிக்கப்படுவது காடு அழிப்பின் ஒரு தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது.

எனவே, இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள கமநல சேவை நிலைய அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .