2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் படைப்புழு தாக்கம்

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சோளப்பயிர்ச் செய்கையில், படைப்புழுவின் தாக்கம் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாக, கிளிநொச்சி மாவட்டப் பிரதி விவசாயப்பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன், இன்று (19) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில், தற்போதைய காலபோகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சோளப்பயிர்ச் செய்கைகளில் படைப்புழுவின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில், கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளரிடம் வினவியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் படைப்புழுவின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.

இதற்கான தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த அவர், இவ்வாறு படைப்புழுவின் பாதிப்புகள் ஏனைய பிரதேசங்களில் உணரப்பட்டால், அருகிலுள்ள விவசாயப் போதனாசிரியர்களையோ அல்லது மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்துடனோ தொடர்புகொண்டு இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆசோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் கூறினார்.

அல்லது 021 – 2285726, 077-3028270 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்று, அவர் அறிவுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X