2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் மது விற்பனை நிலையத்துக்கு சீல்

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி -உதயநகர் பகுதியில், சட்டவிரோத மது விற்பனை மேற்கொண்ட தனியார் விற்பனை நிலையமொன்று, பொலிஸாரால் முத்திரையிடப்பட்டது.

அனைத்து மதுபானசாலைகளையும் மறு அறிவித்தல்வரை மூடுமாறு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், உதயநகர் பகுதியில் அமைந்துள்ள விடுதியுடனான தனியார் விற்பனை நிலையத்தில் சட்டவிரோதமாக விற்பனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக விரைந்த பொலிஸார், குறித்த பகுதியை முற்றுகையிட்டனர்.

இதன்போது, குறித்த விடுதியில் விற்பனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையை அவதானித்த பொலிஸார், குறித்த விடுதியின் மதுபான நிலையத்துக்கு முத்திரையிட்டனர். இதன்போது குறித்த நிலையத்தில் மூவர் நின்றிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதுகள் இடம்பெறாத நிலையில், சம்பவம் தொடர்பில் உரிமையாளர் மீது வழங்கு தாக்கல் செய்ய உள்ளதாக பொலிஸார் கூறினர்.

சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில், மதுவரி திணைக்களத்திடம் குறித்த வழங்கைப் பாரப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், நாட்டில் உள்ள நட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பிலும் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X