2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கிளிநொச்சியில் விபத்து;பெண் பலி

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, சேவையர்கடைச் சந்திக்கு அருகில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 77 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியிலுள்ள கடை ஒன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது, மற்றொரு முச்சக்கரவண்டி மோதியதாலே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X