2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘கிளியில் போதிய விதைநெல் கையிருப்பில் ‘

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிளிநொச்சி மாவட்டத்தில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள காலபோக செய்கைக்கு தேவையான விதைநெல் உள்ளதாக பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பி. உகநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் 23, 500 ஹெக்டேயர் நிலப் பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதமான நிலங்களில் புழுதி விதைப்புக்களை விவசாயிகள் மேற்கொள்ளவுள்ளனர்.

மாவட்டத்தில் விதை நெல் தட்டுப்பாடு இருப்பதாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த மாதிரிப் பண்ணையாளர் சங்கம், விதை உற்பத்தி பண்ணை ஆகியவற்றில் போதியளவு விதை நெல் கையிருப்பில் உள்ளன. இதேவேளை பொலனறுவை போன்ற இடங்களிலிருந்தும் நெல்லை எடுத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, இவ்வாண்டு 500 ஹெக்டேயர் நிலப் பரப்பில் கச்சானும் 100 ஹெக்டேயர் நிலப்பரப்பில் கௌபியும் 200 ஹெக்டேயர் நிலப் பரப்பில் உழுந்தும் 200 ஹெக்டேயர் நிலப் பரப்பில் எள்ளும் 100 ஹெக்டேயர் நிலப் பரப்பில் பயறும் பயிரிடுவதுக்கு எதிர்பார்க்கப்படுகின்றது என பி. உகநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .