2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குப்பை வண்டியில் பயணித்த தவிசாளர்

Editorial   / 2019 மே 16 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வடக்கு மாகாண அதிகாரிகளின் புறக்கணிப்பால், வவுனியா நகர சபையில் வாகனப் பற்றாகுறை நிலவுவதாகத் தெரிவித்து வவுனியா நகர சபைத் தவிசாளர் இ.கௌதமன், அவரது வீட்டில் இருந்து குப்பை அகற்றும் உழவு இயந்திரத்தில் பயணித்து நகரசபை அலுவலகத்துக்குச் சென்ற சம்பவமொன்று, இன்று (16) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தவிசாளர் இ.கௌதமன், வடக்கு மாகாண அதிகாரிகளின் புறக்கணிப்பால், வவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த இரண்டு வருடங்களாக நகரசபைக“கான வாகனப் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவித்தார்.

வாகனங்கள் தேவை என்று உரிய திணைக்களங்களுக்குத் தெரியப்படுத்தியும், எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையெனக் குற்றஞ்சாட்டிய அவர், வவுனியாவில் இருப்பவர்கள் தீண்டத் தகாதவர்களாக, வடமாகாண அதிகாரிகள் பார்ப்பதாகவும் சாடினார்.

வவுனியா நகர சபையை மாநாகரசபையாகத் தரமுயரத்த கூடிய நிலை இருந்தும், அது வடமாகாண அதிகாரிகளாலேயே தடைப்படுவதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .