2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’குறைவான வீதிகளே நிரந்தர வீதிகளாக புனரமைக்கப்பட்டுள்ளன’

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 286 கிலோமீற்றர் வீதிகளில் 30 கிலோமீற்றர்களுக்கும் குறைவான  வீதிகளே நிரந்தர வீதிகளாக புனரமைக்கப்பட்டுள்ளதாக, துணுக்காய் பிரதேச சபையினால்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணுக்காய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில்காணப்படுகின்ற பெருமளவான வீதிகள் சேதமடைந்தும் கைவிடப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன.

குறிப்பாக, ஐயன்கன்குளம், புத்துவெட்டுவான், தேறாங்கண்டல் கோட்டடைகட்டியகுளம், தென்னியன்குளம், உயிலங்குளம் போன்ற பகுதிகளில் பெருமளவான வீதிகள் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.

இவ்வாறு காணப்படுகின்ற வீதிகளைப் புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் துணுக்காய் பிரதேச சபையிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, துணுக்காய் பிதேச சபையின் கீழ் சுமார் 286 கிலோமீற்றர் வீதிகள் காணப்படுகின்றன.

இதில் 30 கிலோமீற்றர்களுக்கும் குறைவான வீதிகள் மாத்திரமே நிரந்தர வீதிகளாக புனரமைக்கப்பட்டிருக்கின்றன.

ஏனைய வீதிகளைப் புனரமைப்பதற்கு பெருமளவான நிதி தேவைப்படுகின்றது.
வருமானங்கள் அற்ற சபைகளாக காணப்படுகின்ற இச்சபையில் வீதிகளைப் புனரமைக்க கூடிய வசதிகள் இல்லை.

வேறு நிதிகளைப் பெற்றுதான் இவ்வாறான வீதிகளை புனரமைக்க வேண்டிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X