2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’குளங்களைப் புனரமைத்து பயிர்ச்செய்கைக்கு வழிவகுக்கவும்’

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - தென்னியன்குளம் பகுதியில் உள்ள மூங்கில்குளம், உயிலடி, பாலமோட்டைக்குளம் ஆகியவற்றைப் புனரமைத்து, அதன் கீழான வயல்நிலங்களை பயிர்ச் செய்கைகளுக்கு உட்படுத்த வழிவகை செய்து தரவேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னியன்குளம் பகுதியில், தற்போது 125க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தரமாக வசித்து வருகின்றன. இந்த நிலையில், தென்னியன்குளத்தின் கீழ் தற்போது 916 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் பயிர் செய்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருந்தபோதும் குறித்த கிராமத்தில் நெற்செய்கைக்குரிய சொந்தக் காணிகள் இன்றி கூடுதலான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் தென்னியன்குளம் பிரதேசத்துக்கு உட்பட்ட பெரியமாவில் பகுதியில் உள்ள 150 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் 80 |ஏக்கர் வரையான பகுதிகள் மாத்திரமே பயிர்ச் செய்கைகளுக்க உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனை விட, உயிலடிபாலமோட்டை குளம், மூங்கில்குளம் ஆகிய குளங்கள் கைவிடப்பட்ட குளங்களாகவும் அதன் கீழான வயல்நிலங்கள், பெரியமாவில் பகுதியில் ஒரு பகுதி வயல் நிலங்கள் கைவிடப்பட்ட நிலங்களாகவும் காணப்படுகின்றன.

எனவே, குறித்த குளங்களை புனரமைத்து, அதன் கீழான வயல் நிலங்களை தமக்கு பகிர்ந்தளிக்குமாறு,  காணியற்ற விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .