2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கூட்டுறவுச் சபை கட்டடத்திலிருந்து இராணுவம் வெளியேறியது

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 நவம்பர் 05 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நகர நுழைவாயிலில் சுமார் 28 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த   கூட்டுறவுச் சபைக்கு சொந்தமான கட்டித்தில் இருந்து இன்று திங்கட்கிழமை (05) காலை இராணுவம் முழுமையாக வெளியேறியுள்ளது.

இதன்போது மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி குறித்த கட்டிடத்துக்கு வருகை தந்து மன்னார் மாவட்ட கூட்டுறவுச் சபையின் உப தலைவர் ஜஸ்ரின் சொய்சா உள்ளிட்ட குழுவினரிடம் குறித்த கட்டிடத்துக்கான ஆவணங்களை வைபவ ரீதியாக கையளித்தார்.

குறித்த கட்டிடத்தை பொறுப்பேற்றுக் கொண்ட மன்னார் மாவட்ட கூட்டுறவுச் சபை மேலதிக பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இராணுவத்துக்கு மன்னார் நுழைவாயில் பகுதியில் ஒதுக்கப்பட்ட காணியை இராணுவ உயர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X